/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தை மீட்க கலெக்டரிடம் மனு
/
கோவில் நிலத்தை மீட்க கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 29, 2025 09:52 PM
கிணத்துக்கடவு ;கிணத்துக்கடவு, வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை மீட்க கோரி, மாவட்ட கலெக்டர் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், வடசித்தூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் கட்டப்பட்டது. கோவிலில், நாச்சியார் அம்மன் சன்னதி சுவற்றில் இருக்கும் கல்வெட்டில் உள்ள பெயர்களை சில மர்ம நபர்கள் அழித்து, மகாலட்சுமி தாயார் என்ற பெயரில் கோவிலை பெயர் மாற்றம் செய்து, வரலாற்றை மறைத்து பூர்வீக நிலம் 10.5 ஏக்கர் மற்றும் சிலை ஆகியவற்றில் முறைகேடு செய்துள்ளனர்.
தற்போது, கோவில் நிலத்தில் உள்ள பட்டாவிலும், தனிநபர் பெயருக்கு மாற்றம் செய்து விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவிலின் வரலாற்றை மாற்றி, நிலத்தை அபகரிக்க நினைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலத்தை கோவிலின் பெயருக்கே மாற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.