/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி இடத்தை மீட்க கலெக்டரிடம் மனு
/
பள்ளி இடத்தை மீட்க கலெக்டரிடம் மனு
ADDED : மார் 05, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்;சுப்பராயன் புதூரை சேர்ந்த நடராஜ், மோகன சுந்தரம் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:
கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பராயன் புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள பழைய வகுப்பறை கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டடத்துக்கு தெற்கு பகுதியில் உள்ள இடத்தை, அருகில் உள்ள நபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளார். கழிவு நீர் தொட்டியும் கட்டியுள்ளார். எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு, கழிவு நீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

