UPDATED : அக் 19, 2026 01:08 PM
ADDED : அக் 19, 2026 01:06 PM

அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில், சிங்காநல்லுார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகத்தில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க செயலாளர் வல்லவன் கூறுகையில்,‘‘ மாநிலம் முழுக்க, 1,200 மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்துடன், 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு, இன்னும் பணிவரன்முறை செய்யவில்லை. அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப, கூடுதல் மருந்தாளுனர்கள் நியமிக்க வேண்டும். இவை உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
