ADDED : ஜூலை 31, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியின், 13வது வார்டில் ராஜிவ் நகர் உள்ளது.
இப்பகுதியில் சி.டி.சி., டெப்போ அருகில் இருந்து செல்லும் சாலை, இடையர்பாளையம் வழியாக, அன்னூர் சாலையை சென்றடைகிறது. சாலையின் ஓரத்தில் உள்ள காலியிடத்தில், பொதுமக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். இந்த குப்பையை சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசியது. த.வெ.க., எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த், குப்பை நிறைந்த இடத்தை ஆய்வு செய்தார். பின், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியின் சார்பில், குப்பை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
