/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் பாதுகாப்புக்கு 'பிங்க்' ரோந்து வாகனங்கள்
/
பெண்கள் பாதுகாப்புக்கு 'பிங்க்' ரோந்து வாகனங்கள்
பெண்கள் பாதுகாப்புக்கு 'பிங்க்' ரோந்து வாகனங்கள்
பெண்கள் பாதுகாப்புக்கு 'பிங்க்' ரோந்து வாகனங்கள்
ADDED : நவ 17, 2025 01:46 AM

கோவை: பெண்களின் பாதுகாப்புக்கான, பிங்க் ரோந்து வாகனங்கள் கோவையில் துவக்கி வைக்கப்பட்டன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு சார்பில், பிங்க் நிற ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.12 கோடியில், 80 வாகனங்கள் வாங்கப்பட்டு, கடந்த, 11ம் தேதி துவக்கி வைக்கப்பட்டன.
இந்த வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகர போலீசாருக்கு, ஏழு பிங்க் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.
மாநகரின் ஏழு பிரிவுகளில், இந்த ஏழு வாகனங்கள் இயக்கப்பட உள்ளளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார் வரும் போது, பிங்க் ரோந்து வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, தீர்வு வழங்க உள்ளன.

