/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை வாய்ப்பு பயிற்சி: மாணவர்கள் பங்கேற்பு
/
வேலை வாய்ப்பு பயிற்சி: மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 30, 2026 08:09 AM

வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி நடந்தது. உதவி பேராசிரியர் பிரியதர்ஷனி வரவேற்றார். வேலை வாய்ப்பு பயிற்சியை கல்லுாரி முதல்வர் கோபி துவக்கி வைத்தார்.
மாணவர்களின் எதிர்காலம் வளமானதாக மாற்றியமைக்க, இது போன்ற வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வது மிக அவசியம்.
படிப்பு மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதி உடையது. பயிற்சியை மாணவர்கள் பயனுள்ளதாக்கி, எதிர்கால வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என, கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.
கோவை கே.வி., இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் உதவி பேராசிரியர்கள் பாக்கியராஜ், ராஜா ஆகியோர் பயற்சி அளித்து பேசும் போது, 'கல்லுாரி படிப்பு படிக்கும் போதே மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த வேலை வாய்ப்பு பயிற்சி மிக அவசியம்,' என்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் அரவிந்தன், உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

