/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே முதல் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் விரைந்து தயாரிக்க திட்டம்
/
மே முதல் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் விரைந்து தயாரிக்க திட்டம்
மே முதல் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் விரைந்து தயாரிக்க திட்டம்
மே முதல் வாரத்தில் மதிப்பெண் பட்டியல் விரைந்து தயாரிக்க திட்டம்
ADDED : ஏப் 25, 2025 11:39 PM
பொள்ளாச்சி: மே மாதம் 3ம் தேதிக்குள், ஆண்டு இறுதித்தேர்வு எழுதிய 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்- 1, பிளஸ்- 2, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 1ஆம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த, 17ம் தேதியே விடுமுறை விடப்பட்டது.
ஆறாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு இறுதி தேர்வு நடந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன், 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அதேநேரம், வரும், 30ம் தேதி வரை, ஆசிரியர்கள், பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமையாசியர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனால், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வழக்கம்போல, பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் பள்ளி திரும்பியவுடன், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யும் பணி துவக்கப்படும். அதன்படி, மே மாதம் 3ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
பின்னர், முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதலின்படி, தேர்ச்சி விபரம் வெளியிடப்படும். மேலும், 5, 8 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம் என அறிவிப்பு வெளியானால், மாணவர்கள் சேர்க்கையில் முனைப்பு காட்டப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.