/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரையில் பசுமை வனம் மரக்கன்றுகள் நட்டு துவக்கம்
/
மதுக்கரையில் பசுமை வனம் மரக்கன்றுகள் நட்டு துவக்கம்
மதுக்கரையில் பசுமை வனம் மரக்கன்றுகள் நட்டு துவக்கம்
மதுக்கரையில் பசுமை வனம் மரக்கன்றுகள் நட்டு துவக்கம்
ADDED : மார் 07, 2024 03:57 AM

போத்தனூர் : பிள்ளையார்புரத்தில், பசுமை வனம் உருவாக்கும் பணி துவக்கம் முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பல்லுயிர்களுக்கான பசுமை வனம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பிள்ளையார்புரத்தில், 27 ஏக்கர் பரப்பில், வனத்துறை அனுமதியுடன், இசட் எப் காற்றாலை நிறுவனத்தின், சமுதாய மேம்பாட்டு நிதியுதவி மூலம், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் மரக்கன்று நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜி., சந்திரசேகரன், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், இசட் எப் காற்றாலை நிறுவன நிர்வாக இயக்குனர் தீபக் பொஹேகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பொது மேலாளர் சீனிவாஸ், பொது மேலாளர் சசிகலா, முதன்மை இன்ஜி., விவேக் மற்றும் பி.எஸ்.ஜி., பார்மசி, கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஏற்பாடுகளை செய்திருந்தார்.

