/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை மறைக்கும் செடிகள்; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
/
சாலையை மறைக்கும் செடிகள்; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
சாலையை மறைக்கும் செடிகள்; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
சாலையை மறைக்கும் செடிகள்; வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்
ADDED : ஏப் 09, 2025 06:49 AM

அன்னுார்; அன்னுார் சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோர செடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில் அன்னுார் அடுத்த பசூர் மற்றும் செட்டியார் மில் பஸ் ஸ்டாப்புகளில் உள்ள மூன்று வளைவுகளில் சாலையோர செடிகள் அதிக அளவில் வளர்ந்து சாலையின் ஒரு பகுதியை மறைத்துள்ளன.
இதனால் சத்தியில் இருந்து வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பெரும் விபரீதம் நடக்கும் முன், அன்னுாரில் இருந்து சத்தி செல்லும் பாதையில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடிகளை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.