/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்: மலைப்பாதையில் திக்திக் பயணம்
/
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்: மலைப்பாதையில் திக்திக் பயணம்
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்: மலைப்பாதையில் திக்திக் பயணம்
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்: மலைப்பாதையில் திக்திக் பயணம்
ADDED : நவ 12, 2025 11:11 PM

வால்பாறை: வால்பாறை மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள செடிகளால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.
தற்போது, வடகிழக்குப் பருவமழை சாரல் மழையாக பெய்யும் நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது.
இந்நிலையில், ஆழியா றில் இருந்து வால்பாறை வரையான மலைப்பாதையில் இருபுறமும், செடிகள் உயரமாக வளர்ந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருப்பதால், மலைப்பாதையில் அடிக்கடி விபத்து அபாயம் உள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
ஆழியாறு முதல் வால்பாறை வரையான பாதையில், செடிகள் வளர்ந்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இதே போல் வால்பாறையிலிருந்து ஸ்டேன்மோர் வழியாக சோலையாறுடேம் செல்லும் ரோட்டிலும், கருமலை வழியாக பாலாஜி கோவில் செல்லும் ரோடுகளிலும் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இதனால், யானைகள், சிறுத்தை நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளை உடனடியாக அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

