தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோத்தகிரி சாலையில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு

கோத்தகிரி சாலையில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு

கோத்தகிரி சாலையில் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு


ADDED : செப் 29, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கோத்தகிரி வனச்சாலையில், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 800 கிலோ பிளாஸ்டிக் குப்பயை சேகரித்தனர்.

நீலகிரி செல்லும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி வனச்சாலையின் வழியாக செல்லும்போது, மீதமான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை சாலையோரம் உள்ள வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர். மதுபாட்டில்களையும் வீசிவிடுகின்றனர். இதனால், வனவிலங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறை சார்பில், வனச்சரகர்கள் சசிகுமார், தினேஷ் தலைமையில் வனவர்கள் முன்னிலையில், வன எல்லையோரம் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை அகற்றும் பணி நடந்தது.

கோத்தகிரி சாலையில் ஓடந்துறை வனச்சோதனை சாவடியில் இருந்து முதல் கொண்டை ஊசி வளைவு வரை நடந்த இப்பணியில், 800 கிலோ பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் கூறுகையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வன எல்லையோரம் நிறுத்திவிட்டு உணவருந்துவதையும், மீதமாகும் உணவு கழிவுகளை வனப்பகுதியில் வீசிச்செல்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது. மதுப்பிரியர்கள் வன எல்லையோரம் அமர்ந்து மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us