/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பொருட்கள் கைவினை கண்காட்சி
/
பிளாஸ்டிக் பொருட்கள் கைவினை கண்காட்சி
ADDED : ஜன 22, 2026 05:11 AM

கோவை: பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
திடக்கழிவு மேலாண்மை குறித்து அரசுப் பள்ளி மாணவர்களிடம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 449 பள்ளிகளை சேர்ந்த 5,945 மாணவர்கள் இதுவரை 11,919 பிளாஸ்டிக் கைவினை பொருட்களை தயாரித்துள்ளனர். இதுவரை 25,882 மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களைக் கொண்டு மாணவர்கள் தயாரித்த கைவினைப் பொருட்களின் கண்காட்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில் 2,026 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் சிறந்த 12 பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

