/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
/
பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ADDED : ஆக 29, 2024 09:59 PM

வால்பாறை : வால்பாறையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழக அரசு, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தடை விதித்தது. இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, நகராட்சி அதிகாரிகள், வனத்துறையினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இதற்கு மாற்றாக, காகிதப்பை, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், வால்பாறை நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு கட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில், சமீப காலமாக, வால்பாறை நகரில் உள்ள சில கடைகளிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சுற்றுலா பயணியருக்கு பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வழங்குகின்றனர்.
சுற்றுலா பயணியர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய பின் அங்கேயே வீசிச்செல்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில கடைகளில் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், கடை உரிமையாளருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பிளாஸ்டிக் இல்லாத வால்பாறையை உருவாக்க நகராட்சி நிர்வாகத்துடன், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார்.