/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
/
மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
ADDED : அக் 02, 2025 12:25 AM
பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலின் சுற்றுப்புறங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அரசு பள்ளி மாணவர்கள் அகற்றினர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு நலப்பணி திட்டம் செப்., 29ம் தேதி முதல் அக்.,2 வரை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையொட்டி சின்ன தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, மருந்தகம், துவக்க பள்ளிகள், கிராமப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், பெரிய தடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் சாமி திருக்கோவில் படிக்கட்டுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். இப்பணியில், 25 மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் திட்ட அலுவலர் ராஜேந்திரன், உடல் கல்வி ஆசிரியர் சண்முகவேல், முதுகலை ஆசிரியர் தர்மலிங்கம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.