sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ப்ளீஸ் துாங்காதீங்க... கொஞ்சம் இங்க கவனிங்க! தேர்தல் பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் குறட்டை

/

 ப்ளீஸ் துாங்காதீங்க... கொஞ்சம் இங்க கவனிங்க! தேர்தல் பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் குறட்டை

 ப்ளீஸ் துாங்காதீங்க... கொஞ்சம் இங்க கவனிங்க! தேர்தல் பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் குறட்டை

 ப்ளீஸ் துாங்காதீங்க... கொஞ்சம் இங்க கவனிங்க! தேர்தல் பயிற்சி வகுப்பில் அதிகாரிகள் குறட்டை


ADDED : மார் 07, 2026 06:44 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு படையினருக்கான பயிற்சி வகுப்பு, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

தேர்தலின் போது பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 9 குழுக்கள் வீதம், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் மொத்தம் 90 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் மாலை 4:00 மணியளவில் இவர்களுக்கான பயிற்சி தொடங்கியது.

சில அதிகாரிகள் தாமதமாக வந்தனர். 'டீ குடித்தது போதும்… உள்ளே வாங்க' என மைக்கில் அறிவித்த பின், போனால் போகட்டும் என்ற ரீதியில் சிலர் அரங்கிற்குள் வந்து சீட்டில் சாய்ந்தனர். பயிற்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பலர் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

அதைக்கண்ட பயிற்சியாளர், தூக்கம் வந்தால் காலைத் தட்டுங்கள்; தூக்கம் ஓடிவிடும் என கெஞ்சாத குறையாக பேசி கொண்டிருந்தார். ஆனாலும், நம் அதிகாரிகள் நித்திரையில் இருந்து மீளவில்லை.

'யாருமில்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துறாங்க' என்ற ஜோக் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை!






      Dinamalar
      Follow us