/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 1; இயற்பியல், பொருளியல் பொதுத்தேர்வு ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
/
பிளஸ் 1; இயற்பியல், பொருளியல் பொதுத்தேர்வு ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1; இயற்பியல், பொருளியல் பொதுத்தேர்வு ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1; இயற்பியல், பொருளியல் பொதுத்தேர்வு ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : மார் 20, 2025 11:28 PM

பிளஸ் 1, இயற்பியல் மற்றும் வணிகவியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, மாவணர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடக்கிறது. நேற்று, மாணவர்கள், இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வை எதிர்கொண்டனர்.
* தேர்வு குறித்து, கந்தசாமி மெட்ரிக் பள்ளிமாணவர்கள் கருத்து வருமாறு:
விஸ்வஜித்: இயற்பியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் 5ம், இரண்டு மதிப்பெண் வினாக்களில் 2ம், மூன்று மதிப்பெண் வினாக்களில் 3ம், அகவினாக்களாக இருந்தது. ஏற்கனவே பயிற்சி எடுத்திருந்ததால், அகவினாக்களுக்கு பதில் எழுத முடிந்தது. கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.
விஸ்மிதா: பொருளியல் தேர்வில், 90 மதிப்பெண்களுக்கும் விடை எழுதியுள்ளேன். அதில், 20 ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு அகவினாக்களாக இருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்களில் கட்டாயமாக எழுத வேண்டி வினா, அகவினாவாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே எளிதாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
* வால்பாறை பியூலா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து:
ஏன்லியா: இயற்பியல் தேர்வை பொறுத்த வரை, படித்த பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். புத்தகத்தில் இருந்து நேரடியாக வினாக்கள் கேட்டப்பட்டதால் தேர்வு எளிதாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஹரிதருண்: இயற்பியல் தேர்வை பொறுத்த வரை, மிக எளிமையான வினாக்கள் கேட்கபட்டதால், தேர்வை விரைவாகவும் தெளிவாகவும் எழுதினேன். பள்ளியில் ஆசிரியர் அதிகம் பயற்சி அளித்த வினாக்கள் கேட்கபட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
பிரித்திவிராஜ்: பொருளியல் தேர்வு எளிமையாக இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில் ஒரு வினா மட்டும் கடினமாக இருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. இதனால், கொடுக்கப்பட்ட நேரத்தில் தேர்வு எழுதி முடிக்க முடிந்தது. நன்றாக தேர்வு எழுதி உள்ளேன். நிச்சயம் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சாரதி: இயற்பியல் தேர்வில், பாடத்தின் 'புக் பேக்' வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்ததாலும், நன்கு பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததாலும் அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் பதில் எழுதி இருக்கிறேன். அரை மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு எழுதி முடிக்க முடிந்தது. அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
* உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
சாதனா: இயற்பியல் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில், கணக்குகள் சிறிது குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் பகுதியிலும் அதேபோல், எதிர்பாராத வகையில் ஒரு வினாவும், இரண்டு மதிப்பெண் வினா பகுதியில் கணக்கு ஒன்றும் குழப்பமாக இருந்தது. ஆனால், நிதானமாக யோசித்து நல்ல முறையில் எழுதி உள்ளேன்.
ரிதன்யாஸ்ரீ: இயற்பியல் தேர்வு ஈஸியாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், கணக்குகள் கேட்டிருந்ததால் குழப்பமாக இருந்தது. மூன்று மதிப்பெண் பகுதியில், எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன. ஐந்து மதிப்பெண் பகுதியில், இரண்டு வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண் கிடைக்கும்.
அழகுசுவாதி:பொருளாதாரம் பாடத்தேர்வு மிகவும் எளிமையாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் மூன்று வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டன. மற்ற பகுதிகளில் பெரும்பான்மையானவை அடிக்கடி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இருந்ததால் சுலபமாக எழுத முடிந்தது.
யுகாஷினி: பொருளாதார பாடத்தேர்வில் எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் வந்திருந்தன. அரையாண்டு, காலாண்டுத்தேர்வுகளிலும், முந்தைய பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் வந்ததாலும், பயிற்சி பெற்றிருந்ததாலும், விடைகளை எளிதில் எழுத முடிந்தது. பள்ளியிலும் தொடர்ந்து தேர்வு வைத்ததால், தற்போது பொதுத்தேர்வில் பதட்டமில்லாமல் எழுத முடிந்தது
- நிருபர் குழு -