sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 2 உயிரியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

/

பிளஸ் 2 உயிரியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 உயிரியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 உயிரியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 18, 2025 09:54 PM

Google News

ADDED : மார் 18, 2025 09:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பிளஸ் 2, உயிரியல் மற்றும் வணிகக்கணிதம் தேர்வு எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடக்கிறது. நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிகக் கணிதம் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொண்டனர்.

தேர்வு குறித்து, பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:

ஸ்வேதா: உயிரியல் தேர்வு மிக எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாகவும், இரு மதிப்பெண் வினாக்களில் சில அகவினாக்களும் இருந்தன. அகவினாக்களை முறையாகப் பயிற்சி எடுத்திருந்ததால், தேர்வை எளிமையாக எதிர்க்கொண்டேன். மூன்று மதிப்பெண் வினாக்கள் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்கிறேன்.

நர்மதா: வணிகக்கணிதம் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. ஒரு வினா மட்டும் சற்று சிந்தித்து எழுதும்படி இருந்தது. இரு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களை தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், எளிதாக விடை எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.

* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

கனிமொழி: உயிரியல் தேர்வு எளிமையாக இருந்தது. படித்த வினாக்கள் அனைத்தும் கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. அரை மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு எழுதி முடிக்க முடிந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

ரமணி: உயிரியல் தேர்வில் பாடத்தின் கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத நேரம் சரியாக இருந்தது. கட்டாய கேள்வியில் ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. மற்ற அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்தது. நன்றாக தேர்வு எழுதியிருக்கிறேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.

* வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

இந்திரா பிரியதர்ஷினி: உயிரியல் தேர்வை பொறுத்த வரை, சில வினாக்கள் கடினமாக இருந்தன. தாவரவியல் பகுதியில் 1, 3 மதிப்பெண்களுக்கான சில வினாக்கள் கடினமாக இருந்தன. நல்ல முறையில் தேர்வுக்காக படித்திருந்ததால், எளிதில் விடை எழுதினேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அபிேஷக்: உயிரியல் தோர்வு சற்று கடினம் என்று தான் சொல்ல வேண்டும். உயிரி-விலங்கியல் 1 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கடினமாக இருந்தன. எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்படவில்லை. பிற வினாக்கள் எளிமையாக இருந்ததால் தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். இது வரை எழுதிய தேர்வில் இந்த தேர்வு சற்று கடினமாக இருந்தது.

* உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

ரத்தினப்ரியா: உயிரியல் பாடத்தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்தபடி இருந்தது. எளிமையாக தேர்ச்சி பெறும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தாவரவியல் பகுதி வினாக்கள் பயிற்சி செய்தவையாக கேட்கப்பட்டிருந்தது.விலங்கியல் பாடப்பகுதியில் கட்டாய வினா சிறிது கடினமாக இருந்தது. நெடுவினாவும் யோசித்து எழுதும் வகையில் இருந்தது.

தீனதயாளன்: உயிரியல் பாடத்தேர்வு குறித்து அச்சத்தில் இருந்தேன். ஆனால், சுலபமாகவே இருந்தது. பாடங்களின் பின் பகுதியிலிருந்து, நிறைய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தாவரவியல் பகுதி மிக எளிமையாக இருந்தது. விலங்கியல் பகுதியில் மூன்று மதிப்பெண் கட்டாய வினாக்கள் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் சிறிது கடினமாக இருந்தது. யோசித்து எழுதினால் கட்டாயம் நுாறு மதிப்பெண் பெறும் வகையில் தான் வினாத்தாள் இருந்தது.






      Dinamalar
      Follow us