/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேற்று துவங்கியது பிளஸ் 2 தேர்வு: முதல் நாளில் 325 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : மார் 02, 2024 01:04 AM

கோவை;பிளஸ்2 தேர்வுகள் நேற்று துவங்கின. கோவையில் 34,121 மாணவர்கள் மொழி பாட தேர்வில் பங்கேற்றனர். 325 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், பள்ளிகள் வாயிலாக, 33, 979 பேரும், தனிதேர்வர்களாக 142 பேரும் எழுதினர். 20 மாணவர்கள் கொண்ட அறைக்கு, ஒருவர் வீதம் அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், 300 பேர் பறக்கும் படைகளாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையங்களை பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''கோவையில் 127 தேர்வு மையங்களில், பிளஸ்2 தேர்வுகள் நடக்கின்றன. ஆண்டு முழுவதும் படித்தது தான் தேர்வில் இருக்கும்; மனஅழுத்தம் இன்றி மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்வு எழுத, கூடுதலாக ஒரு மணி நேரமும் அனுமதிக்கப்படுகிறது,'' என்றார்.