/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம்: 33,659 பேர் எழுதுகின்றனர்
/
பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம்: 33,659 பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம்: 33,659 பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 தேர்வுகள் இன்று துவக்கம்: 33,659 பேர் எழுதுகின்றனர்
ADDED : மார் 01, 2024 12:40 AM
கோவை;பிளஸ்2 பொதுத்தேர்வுகள் இன்று முதல் துவங்கவுள்ள நிலையில், கோவையில் 363 பள்ளிகளை சேர்ந்த, 33,659 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ்2 தேர்வுகள் இன்று முதல் 22ம் தேதி வரை நடக்கின்றன. இன்று தமிழ் பாடத்தேர்வும், 5ம் தேதி ஆங்கில பாடத்தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் மதியம், 1:15 மணி வரை நடக்கிறது. இதற்காக, 131 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மத்திய சிறையில் இருந்து, 20 பேர் பிளஸ்2 தேர்வை நடப்பு கல்வியாண்டில் எழுதவுள்ளனர். மேலும், பிளஸ்1 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி முதல் துவங்குகிறது. இத்தேர்வை, 131 மையங்களில் இருந்து, 35,975 மாணவர்கள் எழுதவுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''கோவையில், தேர்வு செயல்பாடுகளை கண்காணிக்க, 300 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்கள், மைய பொறுப்பாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பதட்டமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள வாழ்த்துக்கள்,'' என்றார்.

