ADDED : ஜூன் 22, 2026 09:49 PM
அ நிறம் | அளவு
கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் 29 முதல் ஜூலை7ம் தேதி வரை நடக்கிறது.
துணைத்தேர்வுக்கு விண் ணப்பித்தவர்கள், தங்க ளது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்.செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். சந்தேகங்களுக்கு 94983 83075, 94983 83076 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
