/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எம்.சாமி காலனியில் மூக்கை பொத்திதான் நடக்கணும்! ஒரு மாதமாக அள்ளாமல் குப்பை தேக்கம்
/
பி.எம்.சாமி காலனியில் மூக்கை பொத்திதான் நடக்கணும்! ஒரு மாதமாக அள்ளாமல் குப்பை தேக்கம்
பி.எம்.சாமி காலனியில் மூக்கை பொத்திதான் நடக்கணும்! ஒரு மாதமாக அள்ளாமல் குப்பை தேக்கம்
பி.எம்.சாமி காலனியில் மூக்கை பொத்திதான் நடக்கணும்! ஒரு மாதமாக அள்ளாமல் குப்பை தேக்கம்
ADDED : மார் 05, 2024 01:09 AM

பூங்கா முழுவதும் குப்பை
கணபதி, ராஜா நகரில், சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. காய்ந்த இலைகள் மற்றும் மரக்குப்பை பூங்கா முழுவதும் பரவிக்கிடக்கிறது. சீரான இடைவெளியில், தண்ணீர் பாய்ச்சாததால், பூங்காவிலுள்ள செடிகள் காய்ந்து வருகின்றன.
- பாலகிருஷ்ணன், கணபதி.
குப்பை தேக்கம்
ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலயா பள்ளி அருகில், பி.எம்.சாமி காலனி, முதல் வீதியில், சாலையோரம் ஒரு மாதமாக குப்பை தேங்கி கிடக்கிறது. குப்பையை அகற்றுவதுடன் மீண்டும் இப்பகுதியில், குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
- காமராஜ், ஆர்.எஸ்.புரம்.
வேகத்தடை வேண்டும்
வடவள்ளி, லட்சுமி நகர், ஆர்ச் முன் உள்ள வளைவில், அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து நடக்கிறது. பள்ளிகள் நிறைந்த பகுதி என்பதால் மாணவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. வளைவில், வேகத்தடை அமைப்பதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம்.
- வாணி, வடவள்ளி.
சாக்கடை வசதியில்லை
விளாங்குறிச்சி, லட்சுமி நகர், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகளில், கழிவுநீர் கால்வாய் வசதி இன்னும் அமைக்கப்படவில்லை. வீடுகளிலிருந்து கழிவுநீரை முறையாக வெளியேற்ற முடியாமல், குடியிருப்போர் தவிக்கின்றனர். சாக்கடை கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.
- கிருஷ்ணன், விளாங்குறிச்சி.
வேகத்தடை வேண்டும்
மருதமலை மெயின் ரோடு, பாரதியார் பல்கலை, ஐ.ஓ.பி., காலனி நுழைவு சாலை முன், சாலையை கடக்க பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். வேகமாக வரும் வாகனங்களால், விபத்து நடக்க வாய்ப்புள்ளது. வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
- முத்துக்குமார், வடவள்ளி.
இரவில் தொடரும் அச்சம்
வடவள்ளி, வைகை வீதியில், மகாராணி அவென்யூவில், கடந்த ஒரு வருடமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் நடமாட பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
- கிருஷ்ணன், வடவள்ளி.
புழுதி பறக்கும் சாலை
உடையாம்பாளையம், செந்தில்நகரில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தார் பெயர்ந்து மண், கற்களாக இருக்கிறது. வாகனங்கள் செல்லும் போது, அதிக புழுதி பறக்கிறது.
- முருகேஷ், செந்தில்நகர்.
கடும் துர்நாற்றம்
ரத்தினபுரி, அருள் நகரில், சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது.
- கவிதா, ரத்தினபுரி.
விபத்திற்கு வாய்ப்பு
திருச்சி ரோடு மேம்பாலத்தில், பிளக்ஸ் பேனர், கம்பத்திலிருந்து விழும் நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சந்தோஷ், சிங்காநல்லுார்.
காயும் பூச்செடிகள்
குறிச்சி குளக்கரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், பராமரிக்கப்படும் அழகிய பூச்செடிகள், மரங்கள் காய்ந்து வருகின்றன. செடிகளுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- முருகன், குறிச்சி.

