/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கு கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு
/
போக்சோ வழக்கு கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு
போக்சோ வழக்கு கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு
போக்சோ வழக்கு கைதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு
ADDED : மார் 28, 2025 03:14 AM
கோவை: போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் போக்சோ வழக்கு கைதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
மாநகரில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பல குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கின்றனர்.
இந்நிலையில், வடகோவையை சேர்ந்த முகமது அனாஸ், 22 என்பவர் பள்ளி சிறுமிக்கு பாலியில் தொல்லை கொடுத்ததாக மத்திய அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, அனாசை சிறையில் அடைத்தனர்.
இதயைடுத்து, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரின் பரிந்துரையில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை போலீசார் மத்திய சிறையில் உள்ள முகமது அனாசிடம் ஒப்படைத்தனர்.