/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளுக்கு 'விசிட்' அடிக்கும் விஷ ஜந்துக்கள்!
/
வீடுகளுக்கு 'விசிட்' அடிக்கும் விஷ ஜந்துக்கள்!
ADDED : அக் 13, 2024 10:36 PM

மோசமான சாலை
கோவை மாநகராட்சி வார்டு 85 குறிச்சி, காந்திஜி ரோடு விநாயகர் நகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழி மழையால் உள்வாங்கியுள்ளது. சரிவர சீரமைக்காததால், மழையில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நடந்து சென்றாலே கீழே விழும் அளவில், சாலை மோசமாக உள்ளது.
- ரஞ்சனி, விநாயகர் நகர்.
* துடியலூர் ஜான் போஸ்கோ நகரில் (வார்டு-1 வடக்கு) சாலை மிகவும் சேதமடைந்து, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. தினமும் விபத்துகள் நடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.
- மோகன்குமார், துடியலுார்.
துர்நாற்றம் தாங்கல
பீளமேடு, பட்டாளம்மன் கோவில் தெருவில் கொட்டப்படும் குப்பைகளால், சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், நோய்த் தொற்று அபாயம் உள்ளது.
-கண்ணன், பீளமேடு.
தெருவிளக்கு எரிவதில்லை
வீரியம்பாளையம் ரோடு கணேஷ் நகர் பகுதியில், 15 நாட்களாக தெரு விளக்கு எரிவதில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரவில் மிகவும் சிரமாக உள்ளது.
-ராஜாத்தி, வீரியம்பாளையம்.
மழைநீர் சூழ்வதால் அவதி
கோவை 88 வது வார்டு, கே.ஜி.கே., சாலை, கோசல் நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழந்துள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் அபாயம் எழுந்துள்ளதால், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். மேலும் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஷ், கோசல் நகர்.
- சங்கர், சமூகஆர்வலர்.
சாலை ஆக்கிரமிப்பு கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பழைய சத்தி ரோடு, 30அடி - 50 அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் டிப்பர் லாரி, வாடகை கார் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளதால் மீண்டும் நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்த வாகனங்களுக்கு பின்னால் அமர்ந்து சிலர் மது அருந்துவதால், அச்சமாக உள்ளது. இந்த சாலை முழு பயன்பாட்டுக்கு வந்தால் கணபதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைநீர் வடிகால் அவசியம்
குருடம்பாளையம் ஊராட்சி, பொதுமக்கள் குடியிருக்கும் காலனி தெருவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா நகரிலிருந்து லேசான மழையின்போதுகூட மழைநீர் சாக்கடைக் கழிவுகளுடன் குளம் போல் தேங்கி, கட்டடங்களுச் சேதம் ஏற்படுத்துகிறது. வீடுகளுக்குள் வெள்ளம் வந்துவிடுவதால், பூச்சி, பாம்புகளும் வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திலகவதி, ரெங்கா காலனி, கிழக்கு தெரு.
தேங்கும் சாக்கடை
கோவை மாநகராட்சி 44வது வார்டு, ஜானகி நகர் பகுதியில் சாக்கடை தேங்கியுள்ளது. மழை காரணமாக மேலும் கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளதால், டெங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
-ஜோசப், ஜானகிநகர்.
ஏன் இந்த பாகுபாடு!
சேரன்மாநகரில் உள்ள குமுதம் நகரில், 6,4,2 குறுக்கு தெரு சாலைகள் மட்டும் குண்டும் குழியுமாக உள்ளன. மற்ற தெருக்கள் அனைத்தும் தார் போடப்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களிலும் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், குமுதம் நகர்.