/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரில் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை தேவை
/
நகரில் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை தேவை
நகரில் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை தேவை
நகரில் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை தேவை
ADDED : பிப் 03, 2025 04:48 AM

வால்பாறை : வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை அதிக அளவில் மக்கள் வரும் சுற்றுலா தலமாக உள்ளது. ஆனால் இங்கு, போக்குவரத்து பிரச்னை நிரந்தரமாக உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை நகரின் இருபுறமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.
இந்நிலையில், வால்பாறை போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் காலை, மாலை நேரங்களில் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதே போல், காந்திசிலை வளாகம், ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், வால்பாறை நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.
ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் கண்டறிந்து, உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். நகரில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை சாலையோர ஆக்கிரமிப்புக்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்,' என்றனர்.
வால்பாறையில் போக்குவரத்து பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.