/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்களுக்கு போலீஸ் 'அட்வைஸ்'
/
பொதுமக்களுக்கு போலீஸ் 'அட்வைஸ்'
ADDED : ஜன 06, 2025 01:12 AM
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு பகுதி மக்களுக்கு போலீஸ் சார்பில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சமீப காலமாக, கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், அவ்வப்போது திருட்டுச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவங்களை தவிர்க்க போலீசார் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, தங்கள் வீடு பூட்டப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். இதில், அலட்சியம் கூடாது. நீண்ட நாள் பயணம் மேற்கொள்ளும் போது, போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை பேங்க் லாக்கரில் வைத்து செல்ல வேண்டும். வீட்டின் வெளிப்புறம் மற்றும் உள்பகுதியின் முக்கிய இடத்தில், கண்காணிப்பு கேமரா அலாரத்துடன் பொருத்தி, இரவு நேரத்தில், வீட்டின் வெளிப்புறத்தில் கட்டாயமாக மின் விளக்குகள் எரிகிறதா என கண்காணிக்க வேண்டும். வீட்டில் முதியவர்களை தனிமையில் விட்டு செல்ல கூடாது.
வீட்டின் அருகாமையில் சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, கிணத்துக்கடவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
போலீசார் கூறும் அறிவுரைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.