/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிமாநில தொழிலாளர்விவரங்களை பதிவு செய்ய வேண்டும் தொழில் நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுரை

ADDED : ஏப் 29, 2025 11:21 PM

மேட்டுப்பாளையம், ; வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை போலீசாருக்கு வழங்க தொழில்நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம்' என போலீசார் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் வடமாநில தொழிலாளர் போர்வையில், வங்கதேசத்தினர் போலி ஆவணங்கள் தயார் செய்து, தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்களா என போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில்நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிகின்றனரா, விடுதிகளில் தங்கியுள்ளனரா என போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-
மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து தொழில்நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களில் வங்கதேசத்தினர் தொடர்பாக கண்காணித்து வருகின்றோம். இங்கு வங்கசேதத்தினர் யாரும் இல்லை.
எனினும் வெளிமாநில தொழிலாளர்கள் புதிதாக பணிக்கு சேர்ந்தால் அவர்களுடைய விவரம் மற்றும் தற்போது பணியில் உள்ள வெளி மாநிலத்தவர்களின் விவரங்களை போலீசாருக்கு வழங்க தொழில்நிறுவன உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை கட்டாயம் தொழிலாளர் நலத்துறைக்கும் அனுப்ப வேண்டும்.
இதற்காக தொழிலாளர் நலத்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in என்ற சிறப்பு வலைதள முகவரியில் தொழிலாளர் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.