/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க.,வினர் மீது போலீஸ் வழக்கு
/
த.வெ.க.,வினர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஜன 01, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் எழுதிய கடிதத்தின் நகலை, அனுமதியின்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்ததற்காக, தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் ஆனந்தை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார், 46 தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
முறையாக அனுமதி பெறாமலும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, போலீசார் அவர்களை கைது செய்தனர். 81 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர்.