/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., கொடி எரிக்க முயற்சி வாலிபர் மீது போலீசில் புகார்
/
பா.ஜ., கொடி எரிக்க முயற்சி வாலிபர் மீது போலீசில் புகார்
பா.ஜ., கொடி எரிக்க முயற்சி வாலிபர் மீது போலீசில் புகார்
பா.ஜ., கொடி எரிக்க முயற்சி வாலிபர் மீது போலீசில் புகார்
ADDED : மார் 29, 2025 11:35 PM

கோவை: கணபதி பகுதியில் கொடி கம்பத்தில் இருந்த பா.ஜ., கொடியை இறக்கி, எரிக்க முயன்ற வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கணபதி, பாரதி நகர், கே.கே.நகர் பகுதியில் பா.ஜ., கொடி கம்பம் உள்ளது. அங்கு நேற்று காலை வந்த வாலிபர் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியை வைத்து, கொடி கம்பத்தில் இருந்த கயிற்றை அறுத்து கொடியை கீழே இறக்கினார்.
பின்னர், கொடியை சாலையில் போட்டு எரிக்க முயன்றார். கொடி பாதி எரிந்த நிலையில், தீ அணைந்ததால் அருகில் இருந்த கடைக்கு தீப்பெட்டி வாங்க சென்றார்.
இதனிடையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த, பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணி மாவட்ட துணை தலைவர் பிரனேஷ் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்போது, கொடியை பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்த டோமனிக் பிரசாந்த், 28 என்பதும், கணபதி பகுதியில் அறை எடுத்து பணிக்கு சென்று வருவதும் தெரியவந்தது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக மாத்திரைகள் எடுத்து வருவதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, பா.ஜ., கணபதி மண்டல் தலைவர் நவீன், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.