/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறிமுதல் வாகனங்களை ஏலமிட போலீசார் முடிவு
/
பறிமுதல் வாகனங்களை ஏலமிட போலீசார் முடிவு
ADDED : பிப் 18, 2026 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பறிமுதல் வாகனங்களை, ஏலமிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில், 20 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதலான வாகனங்கள், வளாகங்களில் ஆண்டுகணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம் என, போலீசார் கூறியுள்ளனர். குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பொது ஏலத்தில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

