ADDED : செப் 15, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விழா நடந்து வருகிறது.
விசர்ஜன ஊர்வலம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடக்கும் வகையில், போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதையான, நேதாஜி மைதானத்தில் துவங்கி, கச்சேரி வீதி, வடக்கு குட்டை வீதி, பெரியகடை வீதி, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு வழியாக, எஸ்.வி.,புரம் வரை நடந்தது.
திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங், டி.எஸ்.பி., தையல் நாயகி மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் உடுமலை சப்-டிவிஷனுக்குட்பட்ட போலீசார், 102 பேர் பங்கேற்றனர்.
