/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
/
கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 09:59 PM

வால்பாறை, ; வால்பாறையில், குற்ற சம்பவங்களை தடுக்க, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.
வால்பாறை நகரில், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து தங்கும் விடுதிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும், என, கோவை ரூரல் எஸ்.பி., ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, வால்பாறையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள கடைகளில் கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார், கடைகளில் கேமரா பொருத்த வேண்டும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர்.
போலீசார் கூறியதாவது:
வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் தங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணியர்களிடம் உரிய அடையாள அட்டை இல்லாமல், தங்கும் விடுதியில் அனுமதிக்கூடாது. வால்பாறையில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், வியாபாரிகளின் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும், சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க, போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.