/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓடையில் பெண் எலும்புக்கூடு போலீசார் விசாரணை
/
ஓடையில் பெண் எலும்புக்கூடு போலீசார் விசாரணை
ADDED : நவ 12, 2025 10:44 PM
பெ.நா.பாளையம்: துடியலூர் என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே ஓடையில் பெண் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே ஆசிரியர் காலனியை ஒட்டிய பகுதியில் ஓடை உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஓடையில் வெள்ள நீர் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இப்பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதை பார்த்த பொதுமக்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஓடையில் கிடந்த எலும்புக்கூடு, 70 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது எனவும், மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். ஓடையை ஒட்டிய பகுதியில் இரண்டு மயானங்கள் உள்ளன. மழைக்காலத்தில் ஓடை ஓரத்தில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எலும்புக்கூடு தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். எலும்புக்கூட்டின் பாகங்களை போலீசார் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

