ADDED : ஜன 20, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் கோபி, 31, தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து பைக்கில் வீடு திரும்பினார். வீட்டின் வெளிப்புறத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார். அதிகாலை வெளியே பார்த்தபோது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் கோபி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிக்கலாம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, கண்காணித்து வருகின்றனர்.