sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போலீஸ் செய்திகள் பொள்ளாச்சி

/

 போலீஸ் செய்திகள் பொள்ளாச்சி

 போலீஸ் செய்திகள் பொள்ளாச்சி

 போலீஸ் செய்திகள் பொள்ளாச்சி


ADDED : பிப் 24, 2026 06:40 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன விபத்தில் ஒருவர் பலி பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் நேற்று, திருப்பூரை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ், 52, மனைவி நாகரத்தினம், 45 இருவரும் பொள்ளாச்சியில் பைக்கில் சென்றனர். சாலைப்புதூரில், பொள்ளாச்சியை சேர்ந்த கவின், 29, என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது. விபத்தில், பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பைக் ரோடு விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்தது.

படுகாயமடைந்த செல்வராஜ், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். நாகரத்தினம் சிகிச்சையில் உள்ளார். நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன், 24, கூலித் தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி வேலை முடித்த பின், வீட்டிற்கு போதையில் வந்தார். மனைவி பிரியங்காவை தாக்கினார். இதனால் மணிகண்டனின் அம்மா மாரியம்மாள் மற்றும் பிரியங்கா இருவரும் இரவு வரை வீட்டின் வெளியே இருந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டினுள் தூக்கிட்டு கொண்டார். பொதுமக்கள் உதவியுடன் மணிகண்டனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மணிகண்டன் உயிரிழந்தார். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us