/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களை ஏலமிட போலீசார் திட்டம்
/
வாகனங்களை ஏலமிட போலீசார் திட்டம்
ADDED : ஜன 25, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகர பகுதிகளில் வழக்குகளில் சிக்கி, நீண்ட நாட்களாக போலீஸ் ஸ்டேஷன்களில் நிற்கும் வாகனங்களை ஏலத்தில் விட, போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோவை மாநகர பகுதிகளில், வழக்குகளில் சிக்கிய மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் கோர்ட் உத்தரவில் உரிமையாளர்களிடம், ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
எனினும், பல வாகனங்களை உரிமையாளர்கள் பெற்று செல்லாமல் உள்ளனர். இந்த வாகனங்கள் பல மாதங்களாக வெயில், மழையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை ஏலத்தில் விட, மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.