தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி தீவிரம்

 போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி தீவிரம்

 போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி தீவிரம்


ADDED : ஜூன் 15, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், 3.39 ஏக்கர் (13,732 சதுர மீட்டர் அல்லது, 1,51,105 சதுர அடி) பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. போதிய பராமரிப்பின்றி வலுவிழந்ததால், போலீசார் குடியிருப்பை காலி செய்தனர்.

அதன்பின், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக கடந்த, 2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு, கட்டடம் இடிக்கப்பட்டது. கடந்தாண்டு, பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு புதியதாக கட்ட அரசு, 76.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள் வீடுகள், 194 போலீசார் என மொத்தம், 222 வீடுகள் கட்டப்படுகின்றன. நீண்ட கால இழுபறிக்கு பின்கடந்தாண்டு கட்டுமானப்பணிகளை துவங்கப்பட்டது.

தற்போது, 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்யும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என, காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us