/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவரிடம் ரூ.38 லட்சம் மோசடி மர்ம நபர்களை தேடும் போலீசார்
/
இருவரிடம் ரூ.38 லட்சம் மோசடி மர்ம நபர்களை தேடும் போலீசார்
இருவரிடம் ரூ.38 லட்சம் மோசடி மர்ம நபர்களை தேடும் போலீசார்
இருவரிடம் ரூ.38 லட்சம் மோசடி மர்ம நபர்களை தேடும் போலீசார்
ADDED : நவ 30, 2025 01:41 AM
கோவை: கோவை, கண பதியை சேர்ந்த, 62 வயது முதியவருக்கு ஒரு வாரத்துக்கு முன், அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தான் பெங்களூரு போலீஸ் எனவும், முதியவர் ஆபாச படம் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
முதியவர் வெளிநாட்டு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாகவும், அவரது ஆதார் எண் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து, சி.பி.ஐ., போலீசார் விசாரிப்பர் எனக்கூறி தொடர்பை துண்டித்தார். சிறிது நேரத்தில் பேசிய ஒரு நபர், தான் சி.பி.ஐ.,யில் இருந்து பேசுவதாகவும், குற்றங்களில் ஈடுபட்டதற்காக முதியவர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் வங்கி கணக்கு விவரங்களையும், அதில் உள்ள தொகையையும் தன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினார்.
விசாரணைக்கு பின் பணம் திருப்பி அனுப்பப்படும் என, தெரிவித்தார். முதியவர் தன் வங்கிக்கணக்கில் இருந்த, 18 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார். ஆனால், பணம் திரும்ப வரவில்லை.
கோவை, லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்த, 41 வயது நபர் ஈச்சனாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் அவரை தொடர்பு கொண்ட ஒரு பெண், தான் தரும் லிங்கை பயன்படுத்தி, ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றார்.
இதை நம்பிய அந்நபர், 8 தவணைகளில் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால், பணம், லாபம் கிடைக்கவில்லை.
இவ்விரு மோசடிகள் குறித்த புகாரின்படி, கோவை சைபர் கிரைம் போலீசார், மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

