UPDATED : ஜூன் 07, 2026 04:28 PM
ADDED : ஜூன் 07, 2026 04:20 PM
கோவை:சென்னை சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி, கடந்த டிச.,ல் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதை வீடியோ ஆதாரத்துடன், அரக்கோணம் போலீசாரிடம் அம்மாணவி புகார் அளித்தார். ரயிலை காட்பாடி நிலையத்தில் நிறுத்தி, போலீசார் விசாரித்தபோது, அவர் கோவை, ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய கான்ஸ்டபிள் ஷேக் முகமது என தெரியவந்தது.
அவரை கைது செய்யாமல், விசாரணையுடன் அனுப்பிவிட்டனர். அவர் தலைமறைவானார். ஷேக் முகமது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும், போலீஸ்காரர் என்பதால் அவரைக் கைது செய்யாமல் இருப்பதாக, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஷேக் முகமதுவை, அரக்கோணம் போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் அருகே கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர்.
