ADDED : மே 25, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர் : -கூடலூரில், பூட்டிய வீட்டில் தலைமை காவலர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நிக்கோலஸ், 47. கூடலூர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாக பணிக்கு வரவில்லை. கூடலூரில், அவர் வசித்து வந்த வாடகை வீட்டிலிருந்து, நேற்று காலை துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டிய வீட்டை திறந்து பார்த்தபோது, நிக்கோலஸ் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.