/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்
/
அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்
அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்
அரசியல் கட்சியினர் வாகனங்களில் விதிமீறல்; திணறும் போக்குவரத்து போலீசார்
ADDED : மார் 19, 2025 06:40 AM

பொள்ளாச்சி : தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டத்தை மீறி 'அட்ராசிட்டி'யில் வலம் வரும் அரசியல் கட்சியினரை தடுக்க முடியாமல், போக்குவரத்து போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் விழி பிதுங்குகின்றனர்.
தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், போக்குவரத்து விதிமீறலையும் பொருட்படுத்தாமல், சொகுசு காரில் அதிவேகமாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதிலும், மோட்டார் வாகன சட்ட விதியை மீறி, தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரியதாக எழுதிக் கொள்வது, சிவப்பு, நீலம் கொண்ட எல்.இ.டி., விளக்குகளை பொருத்துவது, என, இவர்களின் அத்துமீறல் எல்லை தாண்டி செல்கிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
அரசியல் கட்சியினரின் இத்தகைய செயலுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி, அனுமதி இல்லை. சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளில், எஸ்.ஐ., அதனை அகற்றவும், அதிகபட்ச அபராதம் வசூலிக்கவும் உரிமை உள்ளது.
நடவடிக்கையில் ஈடுபட்டால், அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் சிபாரிசும் வந்து விடுகிறது.
கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. கோர்ட் வாயிலாக கடுமையாக உத்தரவிட்டால் இத்தகைய விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு, கூறினர்.