/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி வட்டாரம் ஷூட்டிங்கிற்கு உகந்த இடம்!
/
பொள்ளாச்சி வட்டாரம் ஷூட்டிங்கிற்கு உகந்த இடம்!
ADDED : டிச 24, 2024 10:30 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில், 'பொள்ளாச்சி திருவிழா' நிகழ்ச்சி கடந்த, 22ம் தேதி முதல் நடக்கிறது. அதில், 'ெஹலிகாப்டர் ரைடு' நேற்று முதல் சக்திமில் மைதானத்தில் துவங்கியது. விழாவை துவக்கி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில், முதல் முறையாக ஒன்பது நாட்கள், 'பொள்ளாச்சி திருவிழா' நடக்கிறது. அதில், ரேக்ளா பந்தயம், மராத்தான் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை செயல்படுத்துகிறார். மாணவர்களின் கவனம் வேறு திசை திரும்பிவிடக்கூடாது என நல்வழிப்படுத்த திட்டங்களை செயல்படுத்துகிறார்.
துணை முதல்வர் உதயநிதி, செஸ் ஒலிம்பியாட் போட்டி, கார் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, இந்தியாவிலேயே விளையாட்டு தலைநகரமாக தமிழகத்தை மாற்ற அரும்பணியாற்றி வருகிறார்.
பொள்ளாச்சி வட்டாரம் ஷூட்டிங்கிற்கு உகந்த இடமாக உள்ளது. திரைப்படங்களில், இயற்கையான ரம்மியான சூழலை காட்டுவதற்கு சிறந்த இடமாக உள்ளது.
இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, எந்த பொறுப்பை கொடுத்தாலும், சிறப்பாக நிறைவேற்றி, முதல்வரின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவ்வாறு, பேசினார்.