/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 கிரஷர்களை மூட வேண்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
/
20 கிரஷர்களை மூட வேண்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
20 கிரஷர்களை மூட வேண்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
20 கிரஷர்களை மூட வேண்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு
ADDED : ஜன 04, 2025 10:58 PM
கோவை: கோவை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை உரிமம் இல்லாமல், மாசு ஏற்படுத்தும் வகையில், எம் சாண்ட் தயாரித்து விற்பனை செய்த, 20 கிரஷர்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.
கோவையில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 240 கிரஷர்கள் செயல்படுகின்றன. கடந்த சில வாரங்களாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட இன்ஜினியர்கள், கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில், கிரஷர்களின் செயல்பாடு, உரிமம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெற்கு மாவட்டத்தில் 20 கிரஷர்கள், விதிமுறை மீறி உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரியவந்தது. இந்த கிரஷர்களை மூட, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம், பெரியகுயிலி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிக கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர் ஒருவர் கூறுகையில், 'பொதுப்பணித்துறை அனுமதி உரிமம் பெற்றுதான், கிரஷர்களில் எம்.சாண்ட் தயாரிக்க வேண்டும். ஆனால் அதை மீறி செயல்படுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, உரிமமும் ரத்து செய்யப்படும்' என்றார்.