/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ கழிவுகள் கொட்டி தீ வைப்பு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
/
மருத்துவ கழிவுகள் கொட்டி தீ வைப்பு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
மருத்துவ கழிவுகள் கொட்டி தீ வைப்பு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
மருத்துவ கழிவுகள் கொட்டி தீ வைப்பு மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 24, 2025 11:32 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்த சம்பவம் குறித்து மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனைமலை அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து இருந்தனர்.
மருத்துவ கழிவுகள், கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆகியவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், மருத்துவக்கழிவுகள், மருந்துபாட்டில், ஊசி ஆகியவை கோழிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் எனவும் இதை கொட்டி தீ வைத்திருக்கலாம் என தெரியவந்தது.
இதையடுத்து நரி முடக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மருந்துவ கழிவுகளை கொட்டிய நபர் யார் என்று தெரிந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை கோவையிலிருந்து வந்த பயோ கழிவு சேகரிப்பு வாகனம் வாயிலாக கோவைக்கு எடுத்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.