/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசு இல்லாத தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
மாசு இல்லாத தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2024 08:18 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் பள்ளியில், பட்டாசு மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், பட்டாசு மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார்.
பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் சுதா, ராஜேஸ்வரி ஆகியோர் பேசியதாவது:
பண்டைய காலத்தில் போரில் வெற்றி பெற்றதுக்காக பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் அதிக நச்சுத்தன்மை உடைய வாயுக்கள் வெளிவருகின்றன.
காற்று மாசுபாட்டினால் மனிதனின் ஆயுட்காலம், 3 முதல், நான்கு ஆண்டு வரை குறைகிறது. நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுகிறது.வெடி வெடிப்பதால் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டாசு தீமைகளை, பசுமை பட்டாசு வாயிலாக குறைத்து தீப திருநாளில் தீய எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே தீபத்திருநாளின் நோக்கமாகும்.
இவ்வாறு, அவர் கூறினர்.
பள்ளியில் பட்டாசு மாசுபாடு பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
கிணத்துக்கடவு
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு இல்லாத தீபாவளி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாசு இல்லாத தீபாவளி கொண்டாட உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அதிகமாக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுற்று சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.