/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8.02 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 8ம் தேதி முதல் வினியோகம் துவக்கம்
/
8.02 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 8ம் தேதி முதல் வினியோகம் துவக்கம்
8.02 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 8ம் தேதி முதல் வினியோகம் துவக்கம்
8.02 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 8ம் தேதி முதல் வினியோகம் துவக்கம்
ADDED : ஜன 06, 2026 06:12 AM
-- நமது நிருபர் -:
திருப்பூர் மாவட்டத்தில், இந்தாண்டு 8.02 லட்சம் கார்டுதாரர்களுக்கு, இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 14ம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் வாரியாக, பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி - சேலை ஆகியவை வழங்கப்படுகின்றன.
பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் போதுமான அளவு, பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.பரிசுத்தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகளில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 79 அரிசி கார்டு; 322 இலங்கை தமிழர் கார்டு என, 8 லட்சத்து 2,201 கார்டுகளுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
அவிநாசி தாலுகாவில், 84 ஆயிரத்து 11 அரிசி கார்டு மற்றும் 103 இலங்கை தமிழர் கார்டு; தாராபுரத்தில் 98 ஆயிரத்து 36 கார்டு; காங்கயத்தில் 78 ஆயிரத்து 168 அரிசி கார்டு மற்றும் 87 இலங்கை தமிழர் கார்டு; மடத்துக்குளத்தில் 37 ஆயிரத்து 74; பல்லடத்தில், 83 ஆயிரத்து 42 அரிசி கார்டு, 48 இலங்கை தமிழர் பரிசு தொகுப்பு பெறுகின்றனர்.
திருப்பூர் வடக்கு தொகுதியில், 1 லட்சத்து 40 ஆயிரத்து 507; திருப்பூர் தெற்கு தொகுதியில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 276; உடுமலையில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 115 அரிசி கார்டு, 84 இலங்கை தமிழர்; ஊத்துக்குளியில் 36 ஆயிரத்து 650 கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெறுகின்றனர்.
பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளுக்கு, கார்டு தாரரின் பெயர், பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் விவரங்கள் குறிப்பிடப்பட்ட டோக்கன் அச்சிடப்பட்டு, ரேஷன் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் முதல், வழக்கமான வழங்கல் பணிகளோடு, டோக்கன் வினியோகமும் துவங்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதிக்குள் டோக்கன் வழங்கி முடித்து, 8ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வினியோகத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

