/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி
/
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி
ADDED : ஜன 10, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: சூலூர் தாலுகாவில், நீலம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நீலம்பூர், அரசூர், முத்துக்கவுண்டன் புதூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்பை பெற்று சென்றனர்.

