தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/  மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு  துவக்கம்

 மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு  துவக்கம்

 மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு  துவக்கம்


UPDATED : ஜூலை 16, 2026 06:25 PM

ADDED : ஜூலை 16, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 06:25 PM ADDED : ஜூலை 16, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட மக்கள், 17.07.2026 முதல் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு படிவத்தை ஆன்லைன் வாயிலாக பூர்த்தி செய்யலாம், என, சப்-கலெக்டர் அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி அறிக்கை:

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்டமாக, வீட்டு கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியல் பணிகள் துவங்க உள்ளன. பொதுமக்கள், இன்று முதல், 31ம் தேதி வரை https://se.census.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, சுய கணக்கெடுப்பு செய்து கொள்ளலாம்.

மக்கள் தங்களது குடும்பத்துக்கான பதிவுகளை இணையதளத்தின் வாயிலாக, தாங்களே பதிவு செய்யும் வசதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை அக்குடும்ப தலைவரின் தொலைபேசி எண் வாயிலாக மட்டுமே, 33 கேள்விகளை ஆன்லைன் வாயிலாக பூர்த்தி செய்யும் போது, அக்குடும்பத்தின் 'செல்ப் எம்யூனிரேஷன்' (சுய கணக்கெடுப்பு) பதிவு முடிவடைகிறது.

அதை தொடர்ந்து, வரும் ஆக., 1ம் தேதி முதல், 30ம் தேதி கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வர். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின் கிடைக்கும், 12 இலகக எண்ணை பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்திருந்து, கணக்கெடுப்பாளரிடம் வழங்கி விபரங்களை உறுதி செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

நீங்கள் கொடுக்கும் சரியான மக்கள் தொகை தகவல்கள், நாட்டின் அடுத்த, 10 ஆண்டுக்கான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது. எனவே, அனைத்து மக்களும், ஆர்வமுடன் பங்கேற்று சுய கணக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us