/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தராசுடன் 'புளூடூத்' வாயிலாக பி.ஓ.எஸ்., இணைப்பு; ரேஷன் பொருட்கள் முறைகேட்டிற்கு தீர்வு
/
தராசுடன் 'புளூடூத்' வாயிலாக பி.ஓ.எஸ்., இணைப்பு; ரேஷன் பொருட்கள் முறைகேட்டிற்கு தீர்வு
தராசுடன் 'புளூடூத்' வாயிலாக பி.ஓ.எஸ்., இணைப்பு; ரேஷன் பொருட்கள் முறைகேட்டிற்கு தீர்வு
தராசுடன் 'புளூடூத்' வாயிலாக பி.ஓ.எஸ்., இணைப்பு; ரேஷன் பொருட்கள் முறைகேட்டிற்கு தீர்வு
ADDED : ஜூன் 23, 2025 10:49 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ரேஷன்கடைகளில், எலக்ட்ரானிக் தராசை, பி.ஓ.எஸ்., மெஷினுடன் 'புளூடூத்' வாயிலாக இணைத்து, எடை போடும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, வினியோகிக்கப்படும் உணவு பொருட்களின் எடை சரியாக இல்லையென, பல ஆண்டுகளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ரேஷன் கடைகள்தோறும், எடை சரிபார்க்கப்படும் எலக்ட்ரானிக் தராசை, பில் போடும் பி.ஓ.எஸ்., மெஷினுடன் 'புளூடூத்' வாயிலாக இணைத்து, பில் பதிவு செய்யும் நடைமுறை தமிழகம் முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில், 102 ரேஷன் கடைகளில், 54,656 கார்டுதாரர்களும் நகர் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 51 ரேஷன் கடைகளில், 40,318 கார்டுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.
வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், எலக்ட்ரானிக் தராசை பி.ஓ.எஸ்., மெஷினுடன் 'புளூடூத்' உடன் இணைத்து, எடை போடும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் வாயிலாக, நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொருளின் எடை இருந்தால் மட்டுமே பில் பதிவாகும். சற்று அளவு கூடினாலும், பில் பதிவாகாது. பில் போடுவதற்கு சற்று தாமதம் ஆனாலும் நுகர்வோருக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தவிர, ரேஷன் பொருட்கள் எடை அளவு செய்வதில் தவறு நடப்பது தவிர்க்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.