/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முகவரி' இல்லாததாக மாறி வரும் தபால் நிலையம் பராமரிப்பு இருந்தால் மீண்டு வரும்
/
'முகவரி' இல்லாததாக மாறி வரும் தபால் நிலையம் பராமரிப்பு இருந்தால் மீண்டு வரும்
'முகவரி' இல்லாததாக மாறி வரும் தபால் நிலையம் பராமரிப்பு இருந்தால் மீண்டு வரும்
'முகவரி' இல்லாததாக மாறி வரும் தபால் நிலையம் பராமரிப்பு இருந்தால் மீண்டு வரும்
ADDED : நவ 04, 2025 12:24 AM

கோவை: கோவை மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள துணை தபால் நிலைய வளாகம், பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், இதன் பாரம்பரியம் கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கடந்த 1952 பிப்., 22ம் தேதி, பட்டுவாடா இல்லாத துணை தபால் நிலையம் துவங்கப்பட்டது.
இன்றளவும் சேமிப்பு, மணியார்டர், விரைவு தபால் என, அனுப்பப்படும் சேவை மட்டுமே கொண்டுள்ளது.
1990ம் ஆண்டு வாக்கில், இந்த துணை தபால் நிலையம் நவீனப்படுத்தப்பட்டது. ஒரு பகுதியாக, செயற்கை கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் VSAT வாயிலாக, மணியார்டர் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
செயற்கை கோள் வழியாக, குறிப்பிட்ட மையத்துக்கு தபால் அனுப்பட்டு, மத்திய மையம், சேருமிட தபால் நிலையத்துக்கு தகவல் அனுப்பி, அங்கு பணம் பெறுபவருக்கு செலுத்தப்பட்டது.
இவ்வளவு சிறப்பு பெற்ற துணை தபால் நிலையம், தற்போது, இங்கு ஒரு தபால் நிலையம் இருக்கிறதா என்றளவுக்கு தெரியாத நிலை உள்ளது. வளாகம், முட்செடிகளால் சூழ்ந்து விஷ ஜந்துக்களின் படையெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, தபால் துறையில், 'டிஜிபின்', பதிவு தபால் நடைமுறை விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டது என, நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பாரம்பரிய தபால் நிலையங்களையும் சீரமைக்க, தபால் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

