/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியர் நிழற்கூரையில் போஸ்டரால் அலங்கோலம்
/
பயணியர் நிழற்கூரையில் போஸ்டரால் அலங்கோலம்
ADDED : ஜன 21, 2025 10:14 PM

வால்பாறை,; வால்பாறையில் பயணியர் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
வால்பாறையில், நகராட்சி சார்பில் காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், பயணியர் நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பயணியர் கூறியதாவது:
நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில், பல்வேறு இடங்களில் நிழற்கூரை கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி கட்டப்பட்டுள்ள நிழற்கூரையை அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து, போட்டி போட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரைகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
நகராட்சி அதிகாரிகள் பயணியர் நிழற்கூரையில் விதிமீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அத்துமீறி போஸ்டர் ஒட்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.